சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதிப்பில் இறந்தவர் உடல் ஆம்புலன்சில் காத்திருப்பு

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

பண்ருட்டி : கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம் ஊராட்சி வ.உ.சி.,நகரில் வசித்த 55 வயது அடகுக் கடைக்காரர் எலும்பு புற்றுநோயால் அவதியடைந்தார்.

கடந்த ஒரு வாரமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகம் அடைந்த டாக்டர்கள் பரிசோதனைக்கு மாதிரி எடுத்தனர்.நேற்று அவரது உடல்நிலை மோசமடைந்தததால், வீட்டிற்கு அழைத்து செல்ல அறிவுரை வழங்கி, அனுப்பி வைத்தனர். இதையடுத்து அவரை ஆம்புலன்சில் அழைத்து வந்த போது, கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக சென்னை மருத்துவ மனையில் இருந்து தகவல் தெரிவித்தனர்.

மேலும், உடல்நிலை மோசமடைந்த அவர் வரும் வழியில் இறந்தார். தகவலறிந்து பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை செக்போஸ்டில் போலீஸ், சுகாதாரத்துறையினர் ஆம்புலன்சை நிறுத்தி, அவரது உடலை வீட்டிற்கு எடுத்து செல்ல அனுமதி மறுத்தனர். பின் அங்கேயே அடக்கம் செய்ய சுகாதாரத்துறை, வருவாய்த்துறையினர் அனுமதிக்கவில்லை. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால் நேற்றிரவு 9:00 மணிக்கு பிறகு பண்ருட்டி நகராட்சி எரியூட்டும் தகன மேடை அருகே ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டது. அங்கு உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X