இந்தியா

கடைகள் திறப்பு நேரத்தை மாற்ற நேரு வீதி வியாபாரிகள் சங்கம் கோரிக்கை

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

புதுச்சேரி : புதுச்சேரியில் கடைகள் திறப்பு நேரத்தை காலை 9:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை மாற்ற நேரு வீதி வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சங்க துணைத் தலைவர் இசைக்கலைவன், முதல்வர் நாராயணசாமிக்கு அனுப்பியுள்ள கடிதம்:மத்திய அரசு ஜூலை 31-ஆம் தேதி வரை நாடு முழுவதும் பொது ஊரடங்கை நீட்டித்துள்ளது. இந்த ஊரடங்கு எத்தனை காலம் தொடரும் என்று யாருக்கும் தெரியவில்லை.இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த முயற்சிக்கு வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

புதுச்சேரியில் நடைபெறும் வியாபாரம் பெரும்பாலும் அண்டை மாநிலத்தை சார்ந்தே உள்ளது. தற்போது புதுச்சேரிக்கு வரும் வழித்தடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பொருட்கள் வாங்க கடைக்கு வரும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கொரோனா காலத்தில் மக்கள் செலவு செய்ய போதுமான பணம் இல்லாததால், வாங்கும் திறன் குறைந்து வியாபாரம் பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடைகள் திறந்திருக்கும் நேரம் வழக்கத்திற்கு மாறாக காலை 6:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தொழில் செய்வதற்கான அடிப்படை செலவுக்குக் கூட விற்பனை நடைபெறாமல் பல நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. அதனால் புதுச்சேரி மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும், கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் நலன் கருத்தில் கொண்டும், வணிகர்களின் நிதி நெருக்கடிக்கு தீர்வு காணவும், புதுச்சேரி வருவாய் பெருகிடவும், கடைகள் விற்பனை செய்யும் நேரத்தை காலை 9:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நீட்டிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X