இந்தியா

காங்., ஆர்ப்பாட்டம் போலீசார் வழக்குப் பதிவு 

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

புதுச்சேரி : மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்திய காங்., கட்சியினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்து, காங்., கட்சியினர் நேற்று முன்தினம் புதுச்சேரி தலைமை தபால் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், காங்., தலைவர் சுப்ரமணியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பெரியக்கடை போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காலத்தில் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக, காங்., கட்சியைச் சேர்ந்த சூசைராஜ், தவளக்குப்பம் சேகர், செந்தில், பிள்ளைத்தோட்டம் சிவா, வாணரப்பேட்டை சையது மற்றும் நிர்வாகிகள் மீது பெரியக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X