உருளையன்பேட்டையில் இலவச அரிசி வழங்கல் | Dinamalar

இந்தியா

உருளையன்பேட்டையில் இலவச அரிசி வழங்கல்

Added : ஜூலை 01, 2020
Share

புதுச்சேரி : உருளையன்பேட்டையில் மஞ்சள் ரேஷன் கார்டுகளுக்கு இலவச அரிசி வழங்கும் பணியை சிவா எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

உருளையன்பேட்டை தொகுதியில் மஞ்சள் கார்டுகளுக்கு இலவச அரிசி வழங்கும் பணியின் தொடக்க நிகழ்ச்சி புதுச்சேரி திரு.வி.க., அரசுப் பள்ளியில் நேற்று முன்தினம் நடந்தது. அரிசி வழங்கும் பணியை சிவா எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார். இரண்டாம் நாளாக நேற்று ராஜா நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் மஞ்சள் கார்டுகளுக்கு இரண்டு மாதத்திற்கு தலா 10 கிலோ வீதம் 20 கிலோ அரிசி வழங்கும் பணியை துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் குடிமைப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் மற்றும் தி.மு.க., தொகுதி செயலர் சக்திவேல், கிளை செயலர்கள் சசி, அகிலன், தாமரைக்கண்ணன், கிரி, நெல்சன், சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X