இந்தியா

புள்ளியியல் துறையில் நுால்கள் வெளியீடு

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

புதுச்சேரி : புள்ளியியல் தினத்தை யொட்டி புதுச்சேரி பொருளாதாரம் மற்றும் புள்ளிவிவர இயக்ககம் சார்பில் நான்கு புள்ளி விவர நுால்கள் வெளியிடப்பட்டன.

இந்திய புள்ளியியல் தந்தை மெஹலனோபிஸ் பிறந்த நாளான ஜூன் 29ம் தேதியை புள்ளியியல் தினமாக மத்திய அரசின் புள்ளி விவர மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் கொண்டாடி வருகிறது.இந்தாண்டு புள்ளியியல் தினத்தின் தலைப்பாக "நிலையான வளர்ச்சிக் கான இலக்குகள்' என மத்திய அரசின் புள்ளிவிவர மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அறிவித்துள்ளது.இந்த தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி அரசின் பொருளாதாரம்மற்றும் புள்ளிவிவர இயக்ககம் சார்பில் புள்ளிவிவரக் கையேடு 2018--19, புதுச்சேரி ஒரு முன்னோட்டம் -2020, ஆண்டறிக்கை -2019--20, விலைவாசி குறிப்பேடு - மே மாதம் 2020 உள்ளிட்ட நான்கு நுால்கள் வெளியீட்டு விழா நடந்தது.

புள்ளி விபரத்துறை செயலர் பத்மா ஜெய்ஸ்வால், சிறப்புரையாற்றி நான்கு நுால்களையும் வெளியிட்டார்.நிகழ்ச்சியில் துறை இயக்குனர் ராமகிருஷ்ணன், இணை இயக்குனர் ஆதிமூலம், துணை இயக்குனர்கள் ரத்தினவேலு, பக்கிரிசாமி, ஆலோசகர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை புள்ளிவிபர அதிகாரிகள் படுகு ஈஸ்வர ராவ், அய்யம் பெருமாள், சுரேஷ், கிருஷ்ணராஜ், புள்ளியியல் ஆய்வாளர் மோகன்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X