இந்தியா

போலீசுக்கு கொரோனா: ஸ்டேஷன் மூடல்

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

புதுச்சேரி : புதுச்சேரி பெரியகடை போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், ஸ்டேஷன் மற்றும் கிழக்கு எஸ்.பி., அலுவலகம் மூடப்பட்டது.

புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாமல் அரசு தவிக்கிறது. இந்த சூழ்நிலையில், பெரியக்கடை போலீஸ்காரர் ஒருவருக்கு கடந்த 2 நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது. பரிசோதனை செய்ததில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக நேற்று உறுதியானது.அதனைத் தொடர்ந்து பெரியகடை போலீஸ் ஸ்டேஷன் மற்றும் மேல்மாடியில் இயங்கும் கிழக்கு எஸ்.பி., அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தி, 5 நாட்களுக்கு மூடப்பட்டன.

போலீஸ் ஸ்டேஷன் எதிரில் உள்ள கட்டடத்தில் தற்காலிகமாக பெரியகடை போலீஸ் ஸ்டேஷன் மற்றும் எஸ்.பி. அலுவலகம் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.14 பேர் தனிமைகொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட போலீஸ்காரருடன் தொடர்பில் இருந்த பெரியக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 14 பேர், தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.4 நாட்களுக்கு பிறகு, இந்த 14 பேருக்கும் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X