பொது செய்தி

தமிழ்நாடு

'மதுரை கொரோனா'வின் 100 நாள் ஆட்டம்; வைரசின் வேகம் குறையுமா?

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

மதுரை : மதுரையில் கொரோனா பாதிப்பு 100 நாளை நிறைவு செய்துள்ளது. இதுவரை 2557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 32 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.latest tamil newsமதுரையில் மார்ச் 23ல் கொரோனா தனது ஆட்டத்தை துவங்கியது. அண்ணாநகரை சேர்ந்த 54 வயது ஆணை தாக்கியது. படிப்படியாக உயர்ந்த கொரோனா பாதிப்பு,மே மாதம் ஊரடங்கு தளர்விற்கு பின் வேகமெடுத்தது. கொரோனாவிடம் தப்பிக்க தலைநகரில் இருந்து சொந்த ஊருக்கு மதுரைவாசிகள் படையெடுத்தனர். அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. இக்கூட்டத்தில் கொரோனாவுடன் வந்தவர்கள் பலர். அவர்கள் தங்களுக்கு தெரியாமலேயே வெளியில் பரப்ப துவங்கினர்.

குறிப்பாக, மதுரை நகரில் படிப்படியாய் பாதிப்பு உயர்ந்தது. மருத்துவமனைகள், சந்தைகள் கொரோனா 'ஹாட்ஸ்பாட்'களாக மாறின. மே மாதத்திற்கு பின் வைரஸ் மின்னல் வேகம் எடுத்தது. ஜூன் இறுதி வாரம் முதல் யாரும் கற்பனை செய்திராத வேகத்தில் தாக்குதலை தொடுத்து வருகிறது. 100, 200, 300 என உயர்ந்து, மொத்த பாதிப்பு 2557ல் வந்து நிற்கிறது. 67, 52, 137, 97, 202, 194, 217, 284, 303, 257 என கடைசி 10 நாளில் மட்டும் 1810 பேரை வைரஸ் தாக்கியுள்ளது. இதுவரை 32 பேர் பலியாகியுள்ளனர். கடைசி 10 நாள் பலி மட்டும் 24.

மொத்த பாதிப்பில் 80 சதவீதம் மதுரை மாநகராட்சி எல்லைக்குள் நிகழ்கிறது. சந்தைகளில் அலைமோதிய கூட்டம், காற்றில் பறக்கவிடப்பட்ட சமூக இடைவெளி, மாஸ்க், கைகழுவுதலில் மக்கள் காட்டிய மெத்தனம், இப்படி நீங்கா துயரில் துாங்கா நகரை தள்ளிவிட்டுள்ளது. மீண்டும் ஒரு முழு ஊரடங்கு மதுரைக்கு வந்துள்ளது. படிப்படியாக புறநகர் பகுதிக்கும் தொற்று பரவுகிறது. குறிப்பாக மேலுார் பகுதியில் பாதிப்பு திடீர் வேகமெடுத்துள்ளது. இதை கட்டுப்படுத்த தவறினால் மதுரை, சென்னை நகர் போன்று மாறலாம்.


latest tamil news
கொரோனா கடந்து வந்த பாதை* மதுரையில் மார்ச் 22ல் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிந்தது. சளி மாதிரியை எடுத்து தேனி மருத்துவக் கல்லுாரியில் பரிசோதித்தனர். மார்ச் 23ல் தொற்று உறுதி செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இது தான் மாவட்டத்தின் முதல் பாதிப்பு.

* அவருக்கு ஏற்கனவே வேறு சில நோய்கள் இருந்ததால் சிகிச்சை பலன் அளிக்காமல் மார்ச் 24ல் இறந்தார். இதை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்தார். இது தான் தமிழகத்தின் முதல் கொரோனாபலியாக பதிவானது.

* ஏப்., மாதம் முடியும் வரை பாதிப்பு குறைவு தான். மே மாதம் மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர்களால் பாதிப்பு உயர்ந்தது.

* ஜூன் 20ல் முதன்முறையாக பாதிப்பு 100ஐ தாண்டியது.25ல் இரட்டை சதம் கடந்தது. 29ல் 300ஐ தாண்டி அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. இது தான் இதுவரை அதிகபட்ச பாதிப்பாக நீடிக்கிறது.

* கடைசி 10 நாளில் மட்டும் 1810 பேரைகொரோனா வைரஸ் 'அட்டாக்' செய்துள்ளது. சில நாட்களாக அன்றாட பாதிப்பு விகிதத்தில் சென்னைக்கு அடுத்த இடத்தில் மதுரை தொடர்கிறது.


பறந்து வந்த 56 பேருக்கு கொரோனா


மதுரையில் முழுஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் இதுவரை 124 உள்ளூர் விமானங்கள் வந்துஉள்ளன. இதன் மூலம் 8143 பேர் மதுரைக்கு வந்தனர். அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 45 பேருக்கு தொற்று உறுதியானது. இது தவிர சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் இருந்தும் விமானங்கள் வந்துள்ளன. இதில் இதுவரை 2461 பேர் வந்துள்ளனர். 2,442 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது. 11 பேருக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது. இதுவரை விமானத்தில் வந்த 56 பேரை கொரோனா தாக்கியுள்ளது.

இதுவரை பாதிப்பு: 2557
டிஸ்சார்ஜ்: 817
சிகிச்சையில்: 1708
பலி: 32

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
01-ஜூலை-202015:54:03 IST Report Abuse
skv srinivasankrishnaveni வைகைலே நீரிலேயே மருதகாரங்க கைகளே கழுவாதீங்க என்றுகேலி செய்தவர் ஈரோட்டு பெரியார் ஐயா அவங்க தான் ஆனால் அதுக்கு நெறைய வாங்கியும் கட்டிண்டாக
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
01-ஜூலை-202010:26:07 IST Report Abuse
Girija குறையும், எப்போது ? என்றும் இனிமேல், கறிக்கடையிலும் , மீன் மார்க்கெட்டிலும், காய் கறி மார்க்கெட்டிலும், பல மார்க்கெட்டிலும் கூட்டம் கூட்டமாக கட்டிப்புரண்டு வாங்கிக்குவித்து , சோற்றிற்குள் பாத்தி கட்டி சாப்பிடுவதை தவிர்த்தால்.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
01-ஜூலை-202010:04:18 IST Report Abuse
அசோக்ராஜ் அரிவாளுக்கு சிக்காத வைரஸ். அதனால்தான் மருதைக்காரங்க தோத்துட்டாங்க. சினிமா தேட்டருங்க மூடியிருக்கறதால வீரமும் மங்கிக்கிட்டே போகுது. மத்தபடி கேவலம் வைரஸுக்கெல்லாம் பயப்படுறவங்க கெடையாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X