தாய், மகள் ஒரே புடவையில் தூக்கிட்டு தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாய், மகள் ஒரே புடவையில் தூக்கிட்டு தற்கொலை

Added : ஜூலை 01, 2020
Share
மடிப்பாக்கம் : தாயும், மகளும் ஒரே புடவையில் துாக்கிட்டு தற்கொலை செய்தது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை, கீழ்கட்டளை, காமராஜர் நகர், ராஜிவ் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ், 84. இவரது மூத்த மகள் பிரபாவதி, 47.இவரின் கணவர் கோவிந்தசாமி. இவர்களது மகள் சொப்னா, 13. அதே பகுதியில் உள்ள பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.ஐந்து ஆண்டுகளுக்கு முன், கோவிந்தசாமி

மடிப்பாக்கம் : தாயும், மகளும் ஒரே புடவையில் துாக்கிட்டு தற்கொலை செய்தது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை, கீழ்கட்டளை, காமராஜர் நகர், ராஜிவ் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ், 84. இவரது மூத்த மகள் பிரபாவதி, 47.இவரின் கணவர் கோவிந்தசாமி. இவர்களது மகள் சொப்னா, 13. அதே பகுதியில் உள்ள பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.ஐந்து ஆண்டுகளுக்கு முன், கோவிந்தசாமி இறந்துவிட்டார். மகள், பேத்தியை, கீழ்கட்டளை, துரைசாமி நகர், முதல் தெருவில் தனக்கு சொந்தமான வீட்டில் தங்க வைத்து, செல்வராஜ் பராமரித்து வந்தார்.

தினமும் பிரபாவதி வீட்டிற்கு வரும் செல்வராஜ், தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்துவிட்டு செல்வார். நேற்று முன்தினம் இரவு, பிரபாவதி வீட்டிற்கு சென்றார்.நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கவில்லை. சந்தேகமடைந்து, ஜன்னல் வழியாக பார்த்தபோது, அறையில், தாயும், மகளும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. மடிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X