சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உடலை எரிக்கவிடாமல் புழலில் போராட்டம்

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

புழல் : கொரோனா நோயாளியின் உடலை எரிக்க, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டதால், புதைக்கப்பட்டது.

சென்னை, புழல், சக்திவேல் நகரைச் சேர்ந்த, 45 வயது நபர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.நேற்று முன்தினம் இரவு இறந்தார். அவரது உடலை, நேற்று மதியம், 11:30 மணி அளவில், புழல் அடுத்த காவாங்கரை, கன்னடப்பாளையம் இடுகாட்டில் எரிக்க, ஏற்பாடு செய்யப்பட்டது.

அதற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவரின் உடலை எரிப்பதால், நோய் தொற்று பரவும் நிலை உள்ளது. அதனால், எரிக்கக் கூடாது என, போராட்டத்தில் ஈடுபட்டனர்.புழல் போலீசார், அவர்களிடம் பேச்சு நடத்தினர். இதையடுத்து, அந்த உடலை புதைக்க நடவடிக்கை எடுப்பதாக, போலீசார் உறுதி அளித்தனர். அதன்பின், பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X