சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தம்பியை கொலை செய்த, 'பாசக்கார' அண்ணன் கைது

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement
 தம்பியை கொலை செய்த, 'பாசக்கார' அண்ணன் கைது

வியாசர்பாடி : குடிபோதையில், தம்பியை கொலை செய்த அண்ணனை, போலீசார் கைது செய்தனர்.

வியாசர்பாடி, மகாகவி பாரதி நகர், 19வது மத்திய குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ஸ்டெல்லா, 57. இவருக்கு, ஜான்சன், 35, ஜான், 32, ஆகிய இரு மகன்கள் இருந்தனர்.இருவரும், வேலைக்கு செல்லாமல் மது அருந்தி, அடிக்கடி சண்டையிட்டு கொள்வர் எனக் கூறப்படுகிறது. கடந்த, 28ம் தேதி இரவு, மதுபோதையில் இருவரும் சண்டையிட்டு உள்ளனர்.

இதில், எதிர்பாராத விதமாக, தம்பி ஜானின் வயிற்றில் கூர்மையான ஆயுதம் குத்தி, ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.சிகிச்சை முடிந்து, அன்றிரவே, ஜான் வீடு திரும்பினார். பின், காலையில், படுக்கையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனிடையே, ஜான்சனை காணவில்லை.

இது குறித்து, எம்.கே.பி.நகர் போலீசார் விசாரித்தனர்.வீட்டருகே பதுங்கியிருந்த ஜான்சனை, நேற்று காலை, போலீசார் மடக்கி பிடித்தனர்.விசாரணையில், குடிபோதையில் தகராறு ஏற்பட்டு, ஆத்திரத்தில் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து, தம்பி ஜானை வயிற்றில் குத்தியதை, அவர் ஒப்புக் கொண்டதாக, போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.பின், ஜான்சனை கைது செய்து, விசாரணைக்கு பின் சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X