தமிழ்நாடு

கொரோனா இறப்பு விகிதம்; திருவொற்றியூர் முதலிடம்?

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement
கொரோனா இறப்பு விகிதம்; திருவொற்றியூர் முதலிடம்?

திருவொற்றியூர் : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, இறந்தவர்கள் விகிதத்தில், திருவொற்றியூர் முதலிடத்தில் உள்ளது.

சென்னையில், 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு, தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொற்றின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்தாலும், அதே வேகத்தில், குணமடைந்தோர் எண்ணிக்கையும், மளமளவென உயர்ந்து வருகிறது.அதன்படி, தண்டையார்பேட்டையில், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், நேற்றுடன், 71 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ராயபுரத்தில், 70; திரு.வி.க.நகர், கோடம்பாக்கத்தில், தலா, 63; தேனாம்பேட்டையில், 60; அம்பத்துார், 59; வளசரவாக்கம், சோழிங்கநல்லுார் தலா, 57; மணலி, 56; அடையாறு, 55; திருவொற்றியூர், பெருங்குடி, 52; மாதவரம், 51 சதவீதம் பேரும் குணமடைந்தனர்.ஆனால், இறப்பு விகிதத்தில், திருவொற்றியூர் முதலிடத்தில் இருப்பது, பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, அங்கு தொற்று பாதிக்கப்பட்ட, 2,220 பேரில், 48 பேர் உயிரிழந்துஉள்ளனர். இது, சதவீத அடிப்படையில், 2.16 சதவீதமாகும்.

மற்ற மண்டலங்களை காட்டிலும், திருவொற்றியூரில் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம். ஏறக்குறைய, 46 ஆயிரம் பேர், இங்கு உள்ளனர். இதுவே உயிரிழப்பு விகிதம் அதிகரிக்க காரணம் எனக் கூறப்படுகிறது.முறையே, தேனாம்பேட்டை, 2.10; திரு.வி.க., நகர், 1.99; தண்டையார்பேட்டை, 1.87; ராயபுரம், 1.71; அடையாறு, 1.28; கோடம்பாக்கம், 1.27; மணலி, 1.26; பெருங்குடி, 1.24; அண்ணாநகர், 1.14; ஆலந்துார், 1.12; மாதவரம், 1.10; அம்பத்துார், 1.08; வளசரவாக்கம், 1.00; சோழிங்கநல்லுார், 0.60 சதவீதம் என, உயிரிழப்பு விகிதம் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X