பொது செய்தி

தமிழ்நாடு

நகராட்சி கமிஷனருக்கு கொரோனா

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

திருவேற்காடு : திருவேற்காடு, நகராட்சி கமிஷனருக்கு தொற்று உறுதியானதையடுத்து, அங்கு, இதுவரை, 277 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கோவில் நகரமான திருவேற்காடில், ஏப்., 30 முதல், கொரோனாவின் வேகம் அதிகரித்துள்ளது.கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, நகராட்சி நிர்வாகம், தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில், திருவேற்காடு நகராட்சி கமிஷனருக்கு, நேற்று தொற்று உறுதியானது. அவர், தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

இதையடுத்து, நகராட்சி அலுவலக கமிஷனர் அறை, தற்காலிகமாக மூடப்பட்டது. நகராட்சி பணி தொடர்பாக, கமிஷனருடன் தொடர்பில் இருந்த, மற்ற அதிகாரி மற்றும் ஊழியர்களுக்கும், மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.அங்கு, கமிஷனர் மற்றும் இரு நகராட்சி ஊழியர்கள் உட்பட, நேற்று வரை, 277 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X