பொது செய்தி

இந்தியா

சீன 'ஏசி, டிவி'க்கு தடை; மத்திய அரசு தீவிரம்

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (39)
Share
Advertisement
புதுடில்லி: சீனாவின், 59 செயலிகளை தடை செய்திருக்கும் நிலையில், அடுத்தகட்டமாக, 'டிவி, ஏர் கண்டிஷனர்' உள்ளிட்ட, 12 பொருட்களின் இறக்குமதியை குறைப்பது குறித்த நடவடிக்கையில், அரசு தீவிரமாக இறங்கி உள்ளது.குறிப்பாக, ஏர் கண்டிஷனர் மற்றும் அதன் பாகங்களை இறக்குமதி செய்வதில் கட்டுப்பாடுகளை கொண்டு வருவதன் மூலம், உள்நாட்டில், 1 டஜன் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க

புதுடில்லி: சீனாவின், 59 செயலிகளை தடை செய்திருக்கும் நிலையில், அடுத்தகட்டமாக, 'டிவி, ஏர் கண்டிஷனர்' உள்ளிட்ட, 12 பொருட்களின் இறக்குமதியை குறைப்பது குறித்த நடவடிக்கையில், அரசு தீவிரமாக இறங்கி உள்ளது.latest tamil newsகுறிப்பாக, ஏர் கண்டிஷனர் மற்றும் அதன் பாகங்களை இறக்குமதி செய்வதில் கட்டுப்பாடுகளை கொண்டு வருவதன் மூலம், உள்நாட்டில், 1 டஜன் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டு வருகிறது. சுங்க வரி அதிகரிப்பு மற்றும் தொழில்நுட்ப தர கட்டுப்பாடுகளை அதிகரிப்பது உள்ளிட்ட பல வழிகளில், இறக்குமதியை ஒழுங்குபடுத்த திட்டமிடப்படுகிறது.

மேலும், நியமிக்கப்பட்ட துறைமுகங்களிலிருந்து மட்டுமே, குறிப்பிட்ட பொருட்களை இறக்குமதி செய்ய உரிமம் வழங்குவது மற்றும் அனுமதிப்பது பற்றியும் விவாதிக்கப்படுகிறது. இது குறித்து, சில மாதங்களுக்கு முன்பே சில நடவடிக்கைகள் துவங்கி விட்டன. அகர்பத்தி, டயர், பாமாயில் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வதில் சில கட்டுப்பாடுகளை அரசு கொண்டு வந்துள்ளது. இறக்குமதியை குறைப்பதற்கு ஏதுவாக, உள்நாட்டு பொருட்கள் தயாரிப்பை ஊக்குவிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.


latest tamil newsசுங்க வரியை அதிகரிப்பது, இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான தரக் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது, குறிப்பிட்ட பொருட்களை அதற்கு ஒதுக்கப்படும் துறைமுகங்கள் வழியாக மட்டுமே இறக்குமதி செய்வதற்கு உரிமமும் அனுமதியும் வழங்குவது என, பல நடவடிக்கைகளை எடுக்க திட்டமிடப்பட்டு வருகிறது.

ஏர் கண்டிஷனர், 'டிவி' மட்டுமின்றி, உருக்கு, அலுமினியம், காலணிகள், விளையாட்டு பொருட்கள், லித்தியம் அயான் பேட்டரிகள், விளையாட்டு பொருட்கள் என பல்வேறு பொருட்கள், வர்த்தகம் மற்றும் தொழில் துறையினரால் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த பொருட்களுக்கான இறக்குமதிகளுக்கு கட்டுப்பாடுகளை அதிகரித்து, உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு ஊக்கச் சலுகைகள் வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, ஏர் கண்டிஷனர் மற்றும் அதன் பாகங்களை இறக்குமதி செய்வதில் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில், 'அசெம்பிள்' செய்யப்படும் ஏர் கண்டிஷனரில் பயன்படுத்தப்படும், 'கம்பரஸர்'களில், 90 சதவீதம், சீனா மற்றும் தாய்லாந்திலிருந்து இறக்குமதி ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean kadappa india - kadappa,இந்தியா
01-ஜூலை-202018:10:25 IST Report Abuse
ocean kadappa india சீனா வடகொரியா தென்கொரியா தாய்லாந்து மலேசியா சிங்கப்பூர் ஜப்பான் ஊர் ஆட்கள் அனைவரும் ஒரே மாதிரி பெயரிலும் உருவத்திலும் முக தோற்றத்திலும் இருப்பதால் எவன் என்ன வேலை செய்கிறான் என்பது சில நேரங்களில் குழப்பம் தருகிறது. இவன்களிடத்தில் ஒரே வகையான உணவு மொழி கலாசாரம் பேச்சு நடை உடை பாவன் ஒரே சாயலில் தென்டுகிறது. சங் மங் டங் சிங் சொங் ஜிங் என ங் கென்னாவை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். சாம் பெயரில் ஒட்டியுள்ள சங் என்ற வார்த்தை அனைத்து நாட்டினரும் கையாளும் சொல். அதனால் சாம் சங்கும். சீன தயாரிப்பாக இருக்கலாம் என்று எண்ணினேன்.. .
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
01-ஜூலை-202017:52:41 IST Report Abuse
Rajas இரும்பு, ஸ்டீல், பிளாஸ்டிக், தாமிரம், அலுமினியம் போன்ற ரா மெடீரியல் தினமும் ஒரு விலை விற்கிறது. அது தவிர டீசல் விலையும் தினம் ஒரு விலை. ரா மெடீரியல் மற்றும் டீசல் விலையை தினமும் ஏற்றி கொண்டே போனால் இந்திய நிறுவனங்கள் தங்கள் பொருட்கள் விலையை எப்படி fix செய்ய முடியும். இன்று போகும் பேட்ச் டிவிக்கள் 12000 நாளை போகும் பேட்ச் டிவிக்கள் 12050 அடுத்த பேட்ச் 12500 என்றா
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
01-ஜூலை-202017:42:26 IST Report Abuse
Rajas முதலில் அரசின் கொள்கையை மாற்ற வேண்டும். அப்போது தான் பொருட்களை இங்கே தயாரிக்க முடியும். இவ்வளவு வரி விதித்தால் எப்படி இந்திய கம்பனிகள் தாங்கும். கம்பெனி ஆரம்பிக்கும் பொது அடிக்க படும் விசிட்டிங் கார்டில் இருந்து ஆரம்பிக்கும் GST வரி எல்லா பொருளுக்கும் ஆரம்பித்து முடிவே இல்லாமல் போகிறது. அதற்க்கு பின் கம்பனிகளுக்கான அதிக மின் கட்டணம். திடீரெனெ உயர்த்தப்படும் RAW Materials விலை, அதிக விலை டீசல், போக்குவரத்து கட்டணங்கள், விலைவாசியுயர்வால் அதிக சம்பளம், அதிக வாடகை, அதிக அரசு வரி. அரசு அதிகாரிகளின் லஞ்சம், கட்சிகளின் நன்கொடை, இதையெல்லாம் தாண்டி கம்பனிகளுக்கு லாபம் வேறு வர வேண்டும். இந்த கணக்கு போட்டால் சீன பொருட்களை விட இந்திய பொருட்களின் விலை நிச்சயம் அதிகமாக தான் இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X