பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் பயிற்சி விடுதி தனிமை வார்டாக மாற்றம்

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

வீரபாண்டி: வேளாண் பயிற்சி மைய விடுதி தனிமை வார்டாக மாற்றப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்படுவோரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க, சேலம் அரசு மருத்துவமனையில் இடமின்றி, ஒவ்வொரு வட்டாரத்திலும், தனியார் மருத்துவமனைகளில், சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, வீரபாண்டி வட்டாரத்தில், சீரகாபாடி விநாயகா மிஷன்ஸ் மருத்துவமனையில், 150 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு வார்டில், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தொற்று பாதிப்பு, அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த, உத்தமசோழபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் உள்ள, தமிழக வேளாண் பயிற்சி மைய விடுதியில் உள்ள, 20 அறைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து, சேலம் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் நிர்மல்சன் கூறுகையில், ''வேளாண் பயிற்சி மையம் மட்டுமன்றி, மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில், குடிநீர், கழிப்பிடம், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் கூடிய அரசு, தனியார் பள்ளி, கல்லூரி, சமுதாய நலக்கூடம் ஆகியவற்றை, தனிமை வார்டுகளாக மாற்றி, சூழ்நிலைக்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்ள தயாராக வைத்துள்ளோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X