பொது செய்தி

தமிழ்நாடு

குணமடைந்த 7 பேர் அனுப்பிவைப்பு

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

சேலம்: சேலம் மாவட்டம், மாநகர், எல்லைகளில் நடக்கும் பரிசோதனையில், நோய் தொற்று கண்டறியப்படும் நபர்கள், சேலம் அரசு மருத்துவமனையில், தனிமையில் உள்ளனர். அவர்களில், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், பள்ளிபாளையத்தில், தலா ஒருவர், சேலம் மாவட்டத்தில் ஐவர் என, ஏழு பேர் குணம் அடைந்ததால், நேற்று, வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மேலும், நேற்று, தொற்றால் பாதிக்கப்பட்டோர், 25 பேர். இவர்களுடன் சேர்ந்து, கொரோனா வார்டில், 128 பேர் உள்ளனர்.
தம்பதி: இடைப்பாடி, குரும்பப்பட்டியைச் சேர்ந்த, 36 வயது ஊழியர், சென்னையில் குடும்பத்துடன் தங்கி, அங்கிருந்த தனியார் ஆலையில் வேலை செய்தார். அங்கு, தொற்று அதிகமாக பரவியதால், இரு வாரத்துக்கு முன், சொந்த ஊர் திரும்பினார். சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்ததில், அவருக்கும், அவரது, 30 வயது மனைவி, 7 வயது பெண் குழந்தைக்கும் தொற்று உறுதியானது. மேட்டூர் அரசு மருத்துவமனை, கொரோனா வார்டில், முதல்முறையாக, தம்பதியர், அவர்களது குழந்தை அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் குணமடைந்ததால், நேற்று வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். முன்னதாக, மருத்துவமனை கண்காணிப்பாளர் இளவரசி, சித்த மருத்துவர் ஜெயகுமார், தலைமை செவிலியர்கள், பழங்கள் கொடுத்து, கைகளை தட்டி வாழ்த்தி அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X