பொது செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் அலுவலக ஊழியர் 6 பேருக்கு கொரோனா

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

சேலம்: டாஸ்மாக் அலுவலக ஊழியர்கள், ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சேலம் மாவட்ட டாஸ்மாக் அலுவலகம், மல்லூர் அருகே, சந்தியூரில் உள்ளது. அங்கு பணிபுரிந்த, சேலத்தை சேர்ந்த அலுவலருக்கு, கடந்த வாரம் தொற்று உறுதியானது. தொடர்ந்து, அலுவலகத்தில் பணிபுரியும், இளநிலை உதவியாளர் உள்பட அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், ஈரோட்டை சேர்ந்த, இரு ஆண்கள், ஓமலூர், முத்துநாயக்கன்பட்டி பெண், சேலம், கிச்சிப்பாளையம் ஆண், மேட்டூர் ஆண், மல்லூர் ஆண் என, ஆறு பேருக்கு தொற்று இருப்பது நேற்று உறுதியானது. அவர்களை தனிமைப்படுத்த, சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சேலம் மாவட்டத்தில், 216 டாஸ்மாக் கடைகள் உள்ளன. அலுவலர்களுக்கு தொற்று உறுதியானதால், 216 கடை மேற்பார்வையாளருக்கும் பரிசோதனை செய்ய, கலெக்டர் ராமன் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X