பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட எல்லையை கடப்பதில் சிக்கல்: பணியை இழந்து தொழிலாளர்கள் தவிப்பு

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

இடைப்பாடி: மாவட்ட எல்லையை கடக்க, இ-பாஸ் தேவைப்படுவதால், ஈரோடு மாவட்டத்தில் கூலி வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்ட எல்லையோரம் உள்ள கோனேரிப்பட்டி, சிலுவம்பாளையம், கல்வடங்கம், காவேரிப்பட்டி, தேவூர், பூமணியூர், பொன்னம்பாளையம், நெடுங்குளம், பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர் பகுதிகளை சேர்ந்த மக்கள், கட்டுமானம், விவசாயம், பெயின்ட் அடித்தல், விசைத்தறி போன்ற தொழிலில், கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி, சித்தூர், அந்தியூர், ஈரோடு, அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு, தினமும் இருசக்கர வாகனங்களில் சென்று வந்தனர். தற்போது, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல, 'இ - பாஸ்' கட்டாயம் என, அரசு அறிவித்துள்ளது. இதனால், கோனேரிப்பட்டி கதவணை வழியாக, தினமும் ஈரோடு மாவட்டத்துக்கு பணிக்கு சென்று வந்த மக்கள் பாதிக்கப்பட்டனர். நேற்று, வேலைக்கு சென்றவர்கள், எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதுகுறித்து, பொன்னம்பாளையம் கட்டட தொழிலாளி முருகன் கூறியதாவது: தினமும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தூர், பவானி பகுதிகளுக்கு கூலிவேலைக்கு சென்று வந்தேன். இ - பாஸ் வேண்டும் என போலீசார் கேட்பதால், சில நாளாக, வேலைக்கு செல்லவில்லை. இதுவரை, ஈரோடு மாவட்டத்தில் வேலை செய்த நிலையில், தற்போது, சேலம் மாவட்டத்தில் எங்கு சென்று வேலை தேடுவது என, தெரியவில்லை. இதனால், என்னைப்போன்று, மாவட்ட எல்லையில் பணிக்கு செல்வோருக்கு, இ - பாஸ் திட்டத்தில் தளர்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X