பொது செய்தி

தமிழ்நாடு

சேலத்தில் மூதாட்டி உயிரிழப்பு: தொற்றால் பலி 3 ஆக உயர்வு

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

சேலம்: சேலம் மாவட்டத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மூதாட்டி உயிரிழந்ததால், தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. சேலம் மாவட்டம், தலைவாசல், நாவக்குறிச்சியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி செல்லம்மாள், 66. இவர், கடந்த, 27ல் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல்சிகிச்சைக்கு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று முன்தினம், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி, சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இரவு, 10:30 மணிக்கு உயிரிழந்தார். சுகாதாரத்துறை அலுவலர்கள் கூறுகையில், 'செல்லம்மாளுக்கு ரத்த கொதிப்பு இருந்ததால், மாத்திரை சாப்பிட்டு வந்தார். மூச்சுத்திணறல் ஏற்பட, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்' என்றனர். ஏற்கனவே, சேலம் மாவட்டத்தில், தொற்றால் இரு பெண்கள் உயிரிழந்த நிலையில், தற்போது, அதன் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X