பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் ஸ்டேஷன் எதிரே பணிபுரிந்த பத்திர எழுத்தர் உள்பட 8 பேர் பாதிப்பு

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

ஓமலூர்: பத்திர எழுத்தர் உள்பட, எட்டு பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. ஓமலூர் ஸ்டேஷனில் பணிபுரிந்த, 13 போலீசாருக்கு தொற்று ஏற்பட்டது. இதனால், அதன் எதிரே உள்ள பத்திர எழுத்தர், டீக்கடை, ஜெராக்ஸ் கடை உள்ளிட்ட இடங்களில் பணிபுரிந்த, 62 பேருக்கு, நேற்று முன்தினம், சளி மாதிரி சேகரிக்கப்பட்டது. அதில், சேலம் செல்லும் பைபாஸ் பாலம் அருகே, ஓட்டலில் பணிபுரிந்த, 27, 34, 45 வயது ஆண்கள், 39 வயது பெண்ணுக்கு தொற்று இருப்பது, நேற்று உறுதியானது. போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள, 55, 36 வயதுடைய பத்திர எழுத்தர்கள், 38, 60 வயதுடையவர்களுக்கு தொற்று உறுதியானது. அவர்களை, ஓமலூர் மருத்துவர் குழுவினர், பெரியார் பல்கலை சிகிச்சை மையத்துக்கு அழைத்துச்சென்றனர். முன்னதாக, ஓட்டல், பத்திர எழுத்தர் அலுவலகத்தை மூட உத்தரவிட்டு, அங்கு பணிபுரிந்தவர்களை தனிமையில் இருக்க சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தினர். மேலும், நேற்று முன்தினம், சென்னையிலிருந்து, சேலம் வந்த, 51 வயதுடையவருக்கும், தொற்று உறுதியானது.
அரசு பள்ளி ஆசிரியர்: மேட்டூர், ஆஸ்பத்திரி காலனி, திருநகரைச் சேர்ந்த, 40 வயது ஆசிரியர், கொளத்தூர், நீதிபுரம் அரசு உயர்நிலை பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். அவருக்கும், அவரது உறவினர் மூன்று பேருக்கும் தொற்று உறுதியானதால், மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X