பொது செய்தி

தமிழ்நாடு

காதல் ஜோடி போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம்

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

ஆத்தூர்: பெற்றோர் எதிர்ப்பால் வீட்டை விட்டு வெளியேறிய காதலர்கள், திருமணம் செய்துகொண்டு, போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்தனர். கெங்கவல்லி, ஆணையாம்பட்டியைச் சேர்ந்த, பழனிமுத்து மகன் அரவிந்த், 25; பி.எஸ்சி., விவசாயம் படித்துவிட்டு, தன் தோட்டத்தில் விவசாயம் செய்கிறார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தைச் சேர்ந்த சுந்தரகணேசன் மகள் சுகன்யா, 24. ஆத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில், எம்.எஸ்சி., முதலாம் ஆண்டு படிக்கிறார். சுகன்யாவுடன், அரவிந்துக்கு பழக்கம் ஏற்பட்டு, இரு ஆண்டாக காதலித்தனர். வெவ்வேறு சமுதாயத்தினர் என்பதால், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த, 28ல், வீட்டை விட்டு வெளியேறிய ஜோடி, நேற்று முன்தினம், வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். நேற்று, பாதுகாப்பு கேட்டு, ஆத்தூர் மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர். இருவீட்டு பெற்றோரையும், போலீசார் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். மாணவியின் பெற்றோர் வரமறுத்ததால், அரவிந்துடன், சுகன்யாவை, போலீசார் அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X