சேறு, சகதியான மார்க்கெட்: விவசாயிகள் பெரும் அவதி

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

தலைவாசல்: தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட், அங்குள்ள ஏரி அருகே, சிவன் கோவில் நிலத்துக்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இரு நாளாக, தலைவாசலில் பெய்த மழையால், மார்க்கெட்டில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால், பெரும்பாலான பகுதி, சேறு, சகதியாக மாறியது. விவசாயிகள், விற்பனைக்கு கொண்டு வந்த விளைபொருட்களை வைக்க முடியாமல் தவித்தனர். சிலர், வாகனங்களில் வைத்தே விற்பனையை தொடர்ந்தனர். மக்களும், பொருட்களை வாங்குவதில் சிரமம் ஏற்பட்டது. அங்கு, சரக்கு வாகனங்கள் சென்று வருவதால், பெரிய அளவில் மேடு, பள்ளங்கள் ஏற்பட்டு, மழைநீர் தேங்குகிறது. இதனால், மண் கொட்டி நிரவ, விவசாயிகள் வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X