சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தலைவர் மீதான புகாரில் நடவடிக்கை இல்லை: பி.டி.ஓ., வாகனத்தை முற்றுகையிட்ட மக்கள்

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

ஆத்தூர்: பைத்தூர் ஊராட்சி தலைவர் மீதான புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, துணை தலைவர் தலைமையில் மக்கள், பி.டி.ஓ., வாகனத்தை முற்றுகையிட்டனர்.
ஆத்தூர், பைத்தூர் ஊராட்சி தலைவர் கலைச்செல்வி தலைமையில் மாதாந்திரகூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. அதில், குடிநீர் தட்டுப்பாடு உள்ள இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. தொடர்ந்து, பி.டி.ஓ., அருள்பாரதி ஜீப்பில் ஏறி புறப்பட்டபோது, ஊராட்சி துணைத்தலைவர் சந்திரசேகர் தலைமையில் மக்கள், அவரது வாகனத்தை முற்றுகையிட்டனர். பின் பி.டி.ஓ.,விடம், 'ஊராட்சி தலைவர் மீதான புகார் குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை' எனக்கேட்டு வாக்குவாதம் செய்தனர். அப்போது பி.டி.ஓ., 'புகார் மீது துறைரீதியான விசாரணை நடக்கிறது' என்றார். ஆனால், தொடர்ந்து கோஷம் எழுப்பியபடி வாக்குவாதம் செய்தனர். ஆத்தூர் ஊரக போலீசார், பி.டி.ஓ.,வை மீட்டு அனுப்பினர். துணை தலைவர் உள்ளிட்ட மக்களை, போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X