பொது செய்தி

தமிழ்நாடு

அர்ச்சகர், கர்ப்பிணி உள்பட 21 பேருக்கு தொற்று

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

ஆத்தூர்: ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில், கோவில் அர்ச்சகர், கர்ப்பிணி உள்பட, 21 பேருக்கு, தொற்று இருப்பது நேற்று உறுதியானது.
ஆத்தூர் நகராட்சி, அருணகிரிநாதர் தெருவைச் சேர்ந்த, 54 வயது பெண், சிறுநீரக பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு, நேற்று முன்தினம், தொற்று உறுதியானது. இதனால், அவரது குடும்பத்தினர், உறவினர், அருகில் வசிக்கும் நபர் என, 10 பேருக்கு பரிசோதனை செய்தனர். அதில், அப்பெண்ணின், 58 வயது கணவர், 29 வயது மகன், 33 வயது மகள், இவரது ஆறு வயது மகன், இரண்டு வயது மகள், அவர்களின் கீழ் வீட்டில் வசிக்கும், 73 வயது முதியவர் என, ஆறு பேருக்கு, தொற்று உறுதியானது. இதில், 58, 29 வயதுடைய தந்தை, மகன், கோவில் அர்ச்சகர்களாக உள்ளனர். தாண்டவராயபுரத்தில், 24 வயது பெண், மல்லியக்கரையில், 29 வயதுடைய ஏழு மாத கர்ப்பிணி, சீலியம்பட்டி புதூரில், 34 வயது மகள், அவரது, 15 வயது மகள் என, நான்கு பேருக்கு தொற்று உறுதியானது. இவர்கள், சேலம், ஆத்தூர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.


* ஏற்காட்டைச் சேர்ந்த, காய்கறி, இறைச்சி விற்பனையாளர்களான, 60, 56 வயது ஆண்கள், 43 வயது பெண்; வாழப்பாடி, அத்தனூர்பட்டி, 51 வயது பெண்; அயோத்தியாப்பட்டணத்தில், 25, 33, 39 வயதுடைய பெண்கள்; மல்லூரைச் சேர்ந்த, 31 வயது, சந்தியூர் டாஸ்மாக் குடோன் ஆண் பணியாளர், தலைவாசல், காட்டுக்கோட்டையைச் சேர்ந்த, 68 வயது பெண், 32, 28 வயது ஆண்கள் ஆகியோருக்கும் உறுதியானது. இவர்கள், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X