கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் உள்ள சிக்கல்கள் என்னென்ன?

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

பாரிஸ்: கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகம் முழுக்க விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர். அதில் உள்ள சிக்கல் என்னவென்று பார்போம்.



latest tamil news


கொரோனா வைரஸின் மேலே உள்ள புரதத்தை உருவாக்க 1,300 அமினோ அமிலங்கள் பயன்படுகின்றன. இந்த அமினோ அமிலங்கள் தான் கொரோனாவில் உள்ள புரதத்தின் கட்டுமானங்களாகத் திகழ்கின்றன.

இவற்றை உடைத்து விட்டால் வைரஸை ஒழிக்கலாம் என சிகாகோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸில் உள்ள 50 ஆயிரம் ஜீனோம்களின் மாறுபாடுகளுக்கு உட்படுகின்றன. இவ்வாறாக தொடர்ந்து அதன் தன்மை மாறிக்கொண்டிருப்பதால் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது மிகப்பெரிய சவாலாக விளங்குகிறது.

இதன் மாறுபாட்டுக்கு ஏற்ப தடுப்புமருந்து கண்டுபிடிப்பதே விஞ்ஞானிகளின் நோக்கமாக உள்ளது. ஜீன் அளவில் பார்த்தால் ஆஸ்பார்டிக் அமிலம், கிளைசின் அமிலமாக மாறுகிறது. இதுகுறித்து ஸ்பெயின் ஃபெயின்பார்க் பல்கலை விஞ்ஞானி ஏக்கோ கோசர் ஆராய்ந்தார்.


latest tamil news


திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான மாற்றங்கள் சங்கிலித் தொடராக கொரோனா வைரஸில் நடைபெற்று வருவதை அவர் அறிந்தார். கொரோனா வைரஸில் இவ்வாறான மாறும் தன்மை அதனை மேலும் வீரியம் உள்ளதாக மாற்றுகிறது என கண்டறிந்தார்.

இது மனித உடலுக்குள் சென்று தன்னைத்தானே ஆயிரம் மடங்காக பிரதி எடுத்துக் கொள்கிறது. இந்த பிரதி எடுக்கும் தன்மை ஒழுங்கான முறையில் இல்லை. ஆகவே கொரோனா வைரஸ் எந்த வகையில் மாறுகிறது என்பதை கணிப்பது விஞ்ஞானிகளுக்கு மிகப் பெரும் சவாலாக உள்ளது. இதனால் இதற்கு ஏற்ற தடுப்பு ஒன்றை உருவாக்க விஞ்ஞானிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAVIKUMAR - chennai,இந்தியா
01-ஜூலை-202015:39:46 IST Report Abuse
RAVIKUMAR தகுதி உள்ளவை தப்பி பிழைக்கும் என்பது மட்டும் விதி அல்ல. தகுதியை அதீதமாக வளர்த்துக்கொண்டு வல்லமை பெரும் உயிரினமும் அடக்கப்படும் என்பதும் இயற்கையின் விதி.. அன்று டைனோசர்கள் ...இன்று மனித இனமோ எனும் அச்சம் எழுகிறது ...
Rate this:
Cancel
svs - yaadum oore,இந்தியா
01-ஜூலை-202008:31:05 IST Report Abuse
svs //....இதனால் இதற்கு ஏற்ற தடுப்பு ஒன்றை உருவாக்க விஞ்ஞானிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.....//.....இயற்கைக்கு மாறாக மனிதன் நடந்து கொண்டு புது புது வியாதிகளை உருவாக்குவான் ....பிறகு அதற்கெல்லாம் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கணும் .....இன்றைக்கும் 100 வயதுக்கு மேல் வாழும் எந்த வியாதியும் இல்லாத கிராமமே உலகில் உண்டு ....நமது பாரம்பரிய உணவு , சுத்தம் சுகாதாரம் தான் மனிதனை காப்பாற்றும் ....இந்த நேரத்திலும் டாஸ்மாக் திறந்து குடித்தால் மரணம் விரைவில் தழுவும் ......
Rate this:
01-ஜூலை-202008:52:13 IST Report Abuse
vijai seshancorrect...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X