பொது செய்தி

இந்தியா

டிக்டாக் செயலி இந்தியாவில் மீண்டும் வர வாய்ப்பு?

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (38)
Share
Advertisement
புதுடில்லி: டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகள் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. கடந்த ஜூன் 15ஆம் தேதி பகுதியில் நடந்த இந்திய-சீன போரின் விளைவாக இந்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது. டிக் டாக் செயலி இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்று. இது தடை செய்யப்பட்டது பலருக்கு அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தற்போது இந்திய அரசு
TikTok, Banned Apps, china, china apps, டிக்டாக், தடை, இந்தியா, செயலி, வாய்ப்பு

புதுடில்லி: டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகள் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. கடந்த ஜூன் 15ஆம் தேதி பகுதியில் நடந்த இந்திய-சீன போரின் விளைவாக இந்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது. டிக் டாக் செயலி இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்று. இது தடை செய்யப்பட்டது பலருக்கு அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தற்போது இந்திய அரசு தடை செய்யப்பட்ட இந்த செயல்களுக்கு மீண்டும் செயல்பட ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


latest tamil news


செயலில் நடத்தி வரும் தனியார் நிறுவனம் எந்த வகையிலும் தனிநபர் தகவல்களை திருடவில்லை என உறுதி அளிக்கும் வகையில் இந்திய அரசுக்கு விளக்கம் கொடுக்கலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கப்படும்பட்சத்தில் குறிப்பிட்ட செயலி மீண்டும் இந்தியாவில் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளது. தற்போது ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோர் மற்றும் ஐஓஎஸ் ஆகிய தளங்களில் இந்த 59 செய்திகள் நீக்கப்பட்டுள்ளன. இதனால் இவற்றை தங்கள் ஸ்மார்ட் போன்களில் இந்தியர்கள் தரவிறக்கம் செய்ய இயலாது.


latest tamil news


ஆனால் ஏற்கனவே தரவிறக்கம் செய்து பயன்படுத்திவரும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம். ஆனால் விரைவில் அதுவும் முடக்கப்பட வாய்ப்புள்ளது. டிக்டாக் மறுக்கப்பட்டதை தொடர்ந்து அதன் இந்தியா தலைவர் பேட்டியளித்தார். அப்போது கூறிய அவர், தனிநபர் தகவல்களை டிக்டாக் செயலி என்றும் திருடும் செயலில் ஈடுபட்டது இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.

கிட்டத்தட்ட முப்பது லட்சம் இந்திய வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது டிக்டாக். இவற்றில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செயலி மீண்டும் இயங்கினால் இவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கூடும் என்பதில் ஐயமில்லை.

Advertisement
வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
l vijayaraghavan - CHENNAI,இந்தியா
01-ஜூலை-202017:25:44 IST Report Abuse
l vijayaraghavan இத்தனை கோடி பேர் உபயோகித்தனர் என்றால் இந்திய நிறுவனங்களுக்கோ, தொழிற்சாலைகளுக்கோ, அரசுத்துறைப் பணி மேம்பட்டிற்கோ அல்லது எதாவது ஒரு முறையில் டிக் செயலி ஒரு இன்றியமையாத பயன் ஏற்பட்டிருக்க வேண்டும். அப்போது தான் அதில் ஒரு அர்த்தம் இருக்கும். இங்கு கதை வேறு. உலகின் ஒட்டுமொத்த பயன்பாட்டில் பாதிக்கு மேல் இந்தியர்கள் தான் அதில் விழுந்திருக்கிறார்கள் என்றல் அதற்கு காரணம் VAKKIRANGALIN VADIKAALAAGAVUM KATTUPPAADATRA CENSOR ILLATHA THALAMAAGAVUM KANDU ATHARKU ADIMAI ANAVARGAL KOOTTAME ATHIGAM. VERY LATE ACTION.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
01-ஜூலை-202017:14:48 IST Report Abuse
A.George Alphonse இது ஒரு தேவையற்ற செயலி. வேலை வெட்டி இல்லாதோருக்கு மட்டுமே இது பயனுள்ளது. இந்த செயலி இல்லாவிட்டால் ஒன்றும் குடி முழுகிபோகாது.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
01-ஜூலை-202016:42:37 IST Report Abuse
தமிழவேல் எதற்கு அவர்களை நாம் சார்த்திருக்க வேண்டும். நாளடைவில், விலகுவதில் மேலும் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும். அதற்கு இப்போதே விலகி அதற்கு இணையாக ஒரு செயலி ஏற்படுத்துவதில் என்ன பிரச்சனை உள்ளது ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X