தமிழ்நாடு

வாடிக்கையாளர்களின் ஆதார் எண்ணை பதிவு செய்யுங்கள்: கடைகள், நிறுவனங்களுக்கு உத்தரவு

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, அனைத்து கடை, நிறுவனங்களுக்கு வந்து செல்லும், வாடிக்கையாளர்களின் ஆதார் எண், முகவரியை பதிவு செய்ய, கலெக்டர் கதிரவன் கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, அனைத்து மளிகை கடை, மருந்து கடை, ஜவுளிக்கடை, நகைக்கடை, பாலகங்கள், பல்பொருள் அங்காடி, பழக்கடை, அழகு நிலையங்கள், ஸ்பாக்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, கைபேசி எண், ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். இதை கடை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். கடைகளின் அனைத்து பணியாளர்களும், கடைகளின் உள்ளே நுழையும் முன், சோப்பு, தண்ணீரால் கைகளை கழுவி, கிருமி நாசினி தெளித்து சுத்தமாக இருக்க வேண்டும். சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிய வேண்டும். அனைத்து கடைகளிலும் இப்பாதுகாப்பு வழிகளை கடைப்பிடிக்காவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தடை தாண்டும் மக்களால் அச்சம்: மாநகராட்சி, 41வது வார்டு, ஸ்டோனி பிரிட்ஜ் அருகில், அழகாபுரி உள்ளது. இப்பகுதியை சேர்ந்த எட்டு பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்த, 28ம் தேதி முதல், இப்பகுதியில் உள்ள, 80 வீடுகளை சுகாதார அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர். ஆனால், இப்பகுதிவாசிகளில் பலர், தடுப்புகளை தாண்டி வெளியேறுவது அதிகரித்துள்ளது. நேற்று சுகாதார பணிக்கு சென்ற, மாநகராட்சி அதிகாரிகள், வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியும், காதில் போட்டுக் கொள்ளாமல், தடுப்புகளை தாண்டி சென்றனர். இதனால் தொற்று பரவல் அபாயம் அதிகரித்துள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐ.ஆர்.டி., நர்சுக்கு கொரோனா: ஈரோடு ஐ.ஆர்.டி., மருத்துவமனை, முழு அளவில் கொரோனாவுக்கான மருத்துவமனையாக மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஈரோடு மட்டுமின்றி நாமக்கல், கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இங்கு அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா வார்டில், 20க்கும் மேற்பட்ட நர்ஸ்கள் சுழற்சி முறையில் பணி செய்கின்றனர். இதில் ஒரு செவிலியருக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, தகவல் வெளியானது. இதனால் குறிப்பிட்ட வார்டில் பணி செய்யும் மற்றும் பணி செய்த அனைத்து நர்ஸ்களுக்கும் பி.சி.ஆர்., பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கோபியில் தீவிர கண்காணிப்பு: கோபி, கமலா ரைஸ் மில் வீதியை சேர்ந்த, 45 வயது பெண்ணுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் பணிபுரிந்த, சங்ககிரி செட்டியார் ஜவுளிக்கடையில் வேலை பார்க்கும், 147 பேரிடமும் சளி மாதிரி எடுக்கப்பட்டு, கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி சிறப்பு சிகிச்சை மையத்தில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். பெண் குடியிருந்த, கமலா ரைஸ் மில் வீதியில், 24 வீடுகளை சேர்ந்த, 75 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர். இப்பகுதியை போலீசார் கட்டுப்பாட்டுக்குள், சுகாதாரத்துறையினர் நேற்று முதல் கண்காணித்து வருகின்றனர். தொற்றுக்கு ஆளான பெண்ணின், கணவர் மற்றும் அவரது சகோதரிக்கு, சளி மற்றும் காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இருவரும் பெருந்துறை சிறப்பு சிகிச்சை மையத்துக்கு, நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X