ஊழியருக்கு கொரோனா; கூட்டுறவு ஆலை மூடல்: சாயப்பட்டறையில் 15 தொழிலாளர்களுக்கு தொற்று| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊழியருக்கு கொரோனா; கூட்டுறவு ஆலை மூடல்: சாயப்பட்டறையில் 15 தொழிலாளர்களுக்கு தொற்று

Added : ஜூலை 01, 2020
Share

ஈரோடு: கூட்டுறவு துணி நூல் பதனிடும் ஆலையில் ஒருவருக்கும், சாயப்பட்டறையில், 15 ஊழியர்களுக்கும் தொற்று உறுதியானதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு, அசோகபுரத்தில் தமிழ்நாடு கூட்டுறவு துணி நூல் பதனிடும் ஆலை செயல்படுகிறது. இங்கு, 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். மூன்று நாட்களுக்கு முன், ஆலையில் பணி செய்யும் சித்தோடு அருகே தயிர்பாளையத்தை சேர்ந்த தொழிலாளர், காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டு பரிசோதித்ததில், கொரோனா உறுதியானது. இதனால் ஆலையில் உள்ள அனைவருக்கும், அவர்கள் குடும்பத்தினர் என, 1,000 பேருக்கு, இரண்டாவது நாளாக, நேற்றும் கொரோனா பரிசோதனை நடந்தது. இதனால் ஆலை மூடப்பட்டது.


* ஈரோடு அக்ரஹாரம் பகுதியில், ஒரு சாயப்பட்டறையில், 56 பேர் பணி செய்கின்றனர். ஈரோடு திருநகர் காலனியை சேர்ந்த, 51 வயது தொழிலாளி பணி செய்தார். திருப்பூர் மாவட்டம் சென்று வந்த அவருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் ஆலையில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை நடந்தது. இதில், இரு பெண்கள் உட்பட, 15 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து சாயப்பட்டறை மூடப்பட்டது. சாயப்பட்டறையில் பணி செய்தவர்களின் வீடுகள், ஆர்.என்.புதூர், அமராவதி நகர், பி.பி.அக்ரஹாரம், தயிர்பாளையம் பகுதிகளில் உள்ளன. இப்பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்விடங்களை கலெக்டர் கதிரவன், மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் ஆகியோர் ஆய்வு செய்து, சுகாதார நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X