பொது செய்தி

தமிழ்நாடு

கூண்டில் சிக்கியது சிறுத்தை; தாளவாடி மக்கள் நிம்மதி

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

புன்செய்புளியம்பட்டி: தாளவாடி அருகே, ஊருக்குள் புகுந்து கால்நடைகளை கொன்று வந்த சிறுத்தை, கூண்டில் சிக்கியதால், மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், தாளவாடி வனச்சரகம், சூசையபுரம், தொட்டகாஜனூர் கிராமத்தில், கடந்த சில வாரங்களாக ஒரு சிறுத்தை, ஊருக்குள் புகுந்து, மக்களை அச்சுறுத்தியது. வனப்பகுதியை ஒட்டிய தோட்டத்தில், பட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த, ஆடு, மாடுகளை தாக்கி கொன்றது. பீதியடைந்த மக்கள், விவசாயிகள், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கண்காணிப்பில் ஈடுபட்ட வனத்துறையினர், தொட்டகாஜனூர் கிராமத்தில், சண்முகம் என்பவரின் சொந்தமான செயல்படாத கல்குவாரி பகுதியில் கூண்டு வைத்தனர். நேற்று அதிகாலை கூண்டிலிருந்த ஆட்டை பிடிக்க வந்த சிறுத்தை சிக்கியது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக கால்நடை டாக்டர் அசோகன், மயக்க ஊசி செலுத்தினார். வாகனத்தில் கொண்டு சென்று, அடர்ந்த காப்புக்காடுகள் நிறைந்த, கேர்மாளம் வனப்பகுதியில் சிறுத்தையை விடுவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X