சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திம்பம் மலைப்பாதையில் கவிழ்ந்த லாரி

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

பு.புளியம்பட்டி: திம்பம் மலைப்பாதையில் கவிழ்ந்த லாரியால், போக்குவரத்து பாதித்தது. தாளவாடி மலையில் இருந்து சத்தியமங்கலத்துக்கு, கரும்பு ஏற்றிக்கொண்டு, ஒரு டாரஸ் லாரி புறப்பட்டது. நேற்று காலை, 8:00 மணியளவில், திம்பம் மலைப்பாதையில், 21வது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்தது. டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதனால் மலைப்பாதையில் போக்குவரத்து பாதித்தது. ஆசனூர் போலீசார் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். கிரேன் உதவியுடன், 12:00 மணியளவில் லாரி அப்புறப்படுத்தப்பட்டது. இதையடுத்து, 4 மணி நேரத்துக்குப் பிறகு, போக்குவரத்து சீரானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X