திம்பம் மலைப்பாதையில் கவிழ்ந்த லாரி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திம்பம் மலைப்பாதையில் கவிழ்ந்த லாரி

Added : ஜூலை 01, 2020
Share
பு.புளியம்பட்டி: திம்பம் மலைப்பாதையில் கவிழ்ந்த லாரியால், போக்குவரத்து பாதித்தது. தாளவாடி மலையில் இருந்து சத்தியமங்கலத்துக்கு, கரும்பு ஏற்றிக்கொண்டு, ஒரு டாரஸ் லாரி புறப்பட்டது. நேற்று காலை, 8:00 மணியளவில், திம்பம் மலைப்பாதையில், 21வது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்தது. டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதனால்

பு.புளியம்பட்டி: திம்பம் மலைப்பாதையில் கவிழ்ந்த லாரியால், போக்குவரத்து பாதித்தது. தாளவாடி மலையில் இருந்து சத்தியமங்கலத்துக்கு, கரும்பு ஏற்றிக்கொண்டு, ஒரு டாரஸ் லாரி புறப்பட்டது. நேற்று காலை, 8:00 மணியளவில், திம்பம் மலைப்பாதையில், 21வது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்தது. டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதனால் மலைப்பாதையில் போக்குவரத்து பாதித்தது. ஆசனூர் போலீசார் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். கிரேன் உதவியுடன், 12:00 மணியளவில் லாரி அப்புறப்படுத்தப்பட்டது. இதையடுத்து, 4 மணி நேரத்துக்குப் பிறகு, போக்குவரத்து சீரானது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X