பொது செய்தி

தமிழ்நாடு

கன மழையால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து; விவசாயிகள் மகிழ்ச்சி

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

அரூர்: அரூர், மொரப்பூர் பகுதியில் நேற்று முன்தினம் பெய்த கன மழையால், ஏரி, குளம் உள்ளிட்டவைகளுக்கு வந்த நீர்வரத்தால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால், வறட்சி நிலவுகிறது. இதனால், கால்நடைகளுக்கு பசுந்தீவனம் மற்றும் உலர் தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன், மொரப்பூர், பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, 11:20 முதல், நேற்று நள்ளிரவு, 1:00 மணி வரை அரூர், மோப்பிரிப்பட்டி, சோரியம்பட்டி, வடுகப்பட்டி, மாவேரிப்பட்டி, எச்.ஈச்சம்பாடி, தாமலேரிப்பட்டி, பறையப்பட்டி, கீழ்மொரப்பூர், மருதிப்பட்டி, எம்.வெளாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால், அப்பகுதியில் வறண்டு கிடந்த ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு நீர்வரத்து வந்தது. கனமழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X