பொது செய்தி

தமிழ்நாடு

மின் உதவி பொறியாளர் அலுவலகம் இடமாற்றம்

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

அரூர்: அரூர், வடக்கு பிரிவு உதவி பொறியாளர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்படுவதாக, உதவி செயற்பொறியாளர் சத்தியநாராயணன் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அரூர் கோட்டம், கிராமியம் உபகோட்டம் கட்டுப்பாட்டில் உள்ள உதவி பொறியாளர்/ இப/ வடக்கு அரூர் பிரிவு, இது நாள்வரை திரு.வி.க., நகரில் இயங்கி வந்தது. நிர்வாக நலன் கருதி, ஈச்சம்பாடி துணை மின்நிலைய வளாகத்தில் உள்ள, அலுவலக கட்டடத்திற்கு இன்று முதல், மாற்றப்பட உள்ளது. எனவே, வடக்கு அரூர் பிரிவிற்கு உட்பட்ட வடுகப்பட்டி, ஈச்சம்பாடி, தாமலேரிப்பட்டி, தாமரைக்கோழியம்பட்டி, கீழ்மொரப்பூர், செல்லம்பட்டி, சங்கிலிவாடி, காவாபட்டி, கீழானூர், நாதியானூர் பகுதிகளில் உள்ள மின்நுகர்வோர், மின் கட்டணங்களை சிரமமின்றி இங்குள்ள வசூல் மையங்களில் செலுத்தலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X