முகக்கவசம் அணியாத ஓட்டுனர்களுக்கு அபராதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முகக்கவசம் அணியாத ஓட்டுனர்களுக்கு அபராதம்

Added : ஜூலை 01, 2020
Share

நல்லம்பள்ளி: முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து, 70 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில், கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதை தடுக்க, நல்லம்பள்ளி டவுன் வருவாய்த்துறை சார்பில், தாசில்தார் சரவணன் தலைமையில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குமரேசன், துணை தாசில்தார் நாராயணமூர்த்தி, அதியமான்கோட்டை எஸ்.ஐ., மாதவன் உள்ளிட்டோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர், ஒரு வாரமாக பாகலஹள்ளி, நல்லம்பள்ளி, அதியமான்கோட்டை பகுதிகளில், வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில், இரு சக்கர வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் வந்த, 700 பேருக்கு தலா, 100 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும், அவர்களுக்கு முகக்கவசம் இலவசமாக வழங்கினர். ஒரு வாரத்தில், முகக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளிடம் இருந்து, 70 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X