பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா: ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 'சீல்'

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில் மருத்துவ உதவியாளர் உட்பட, 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, 'சீல்' வைக்கப்பட்டது. தர்மபுரி, அம்பலத்தாடி தெருவை சேர்ந்த வாலிபர், சமீபத்தில் கிருஷ்ணகிரி சென்று வந்தார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய குடும்பத்தை சேர்ந்த, 76 முதியவர், 35 வயது பெண், 5 வயது குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் மூவரும், கிசிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூரில் இருந்து, சில நாட்களுக்கு முன், 26 வயது பெண் செவிலியர் தன், கணவருடன் பைக்கில் அரூர் வந்தார். இருவருக்கும் நடத்திய சோதனையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதே போன்று சட்டீஸ்கருக்கு சென்று வந்த, தர்மபுரி மாவட்டம், ஜயம்பட்டியை சேர்ந்த, 26 வயது லாரி டிரைவர், கடலூர் சென்று வந்த போடர்காட்டை சேர்ந்த, 40 வயது பெயின்டர், 35 வயது தனியார் மசாலா நிறுவன பணியாளர், பெங்களூருக்கு சென்று வந்த மூக்கனூரை சேர்ந்த, 29 வயது பழைய இரும்பு கடை வியாபாரி, ஆந்திராவில் சிப்ஸ் கடையில் பணியாற்றி வந்த பென்னாகரம் செக்குமேட்டை சேர்ந்த, 28 வயது வாலிபருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாலக்கோடு தாலுகா, ஜக்கசமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவ உதவியாளராக பணியாற்றி வந்த, 39 வயது வாலிபர் சென்னை சென்று வந்துள்ளார். மருத்துவ துறையினர், அவரை சோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், அவர் பணியாற்றி வந்த, ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சீல் வைக்கப்பட்டது. அவருடன் பணிபுரிந்தவர்கள், அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X