ஊரடங்கு உத்தரவை மீறியவர்களிடம் இருந்து ரூ.19.92 லட்சம் வசூல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு உத்தரவை மீறியவர்களிடம் இருந்து ரூ.19.92 லட்சம் வசூல்

Added : ஜூலை 01, 2020
Share

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், ஊரடங்கு உத்தரவை மீறியவர்களிடம் இருந்து போலீசார், 19 லட்சத்து, 92 ஆயிரத்து, 500 ரூபாய் அபராதம் வசூல் செய்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச், 24 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கில், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும், இதையும் பலர் தொடர்ந்து மீறி வருகின்றனர். மார்ச், 24 முதல் நேற்று முன்தினம் வரை தர்மபுரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக, 16 ஆயிரத்து, 731 வழக்குகளை பதிவு செய்த போலீசார், 19 ஆயிரத்து, 964 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 5,853 பைக்குகள், 126 கார்கள், 83 ஆட்டோக்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், ஊரடங்கு உத்தரவை மீறியவர்களிடம் இருந்து, 19 லட்சத்து, 92 ஆயிரத்து, 500 ரூபாய் அபராதம் வசூல் செய்துள்ளனர். ஊரடங்கு உத்தரவு வரும், 31 வரை தொடர்கிறது. எனவே, பொதுமக்கள் இந்த உத்தரவை கடைப்பிடித்து, கொரோனா பிடியில் இருந்து பாதுகாத்து கொள்ள, போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X