பொது செய்தி

தமிழ்நாடு

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து சரிவு; தென்பெண்ணையில் 240 கன அடி திறப்பு

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

ஓசூர்: ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு, கடந்த மூன்று நாட்களாக, நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில், 240 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.
கெலவரப்பள்ளி அணைக்கு கடந்த, 26ல், 180 கன அடி நீர் வரத்து இருந்தது. நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால், 27ல், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, 693 கன அடியாக உயர்ந்தது. அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால், அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் நீர் திறக்கப்படவில்லை. தண்ணீர் வரத்து முழுவதும் அணையில் சேமிக்கப்பட்டது. நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் கடந்த, 28ல், 679 கன அடியாக சரிந்த நீர்வரத்து, நேற்று முன்தினம் மேலும் குறைந்து, 630 கன அடியாக இருந்தது. நேற்று காலையும், நீர்வரத்தில் சரிவு ஏற்பட்டு, 558 கன அடி நீர் மட்டுமே அணைக்கு வந்தது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 39.36 அடிக்கு நீர் இருப்பு உள்ளதால், தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு, 240 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. வரும் நாட்களில், அணைக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து, தென்பெண்ணை ஆற்றின் வழியாக, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X