பொது செய்தி

தமிழ்நாடு

விவசாய நிலத்தில் கிடைத்த சுவாமி சிலை தாசில்தாரிடம் ஒப்படைப்பு

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

ஓசூர்: கெலமங்கலம் அருகே, விவசாய நிலத்தில் கிடைத்த, லட்சுமி சுவாமி சிலை மீட்கப்பட்டு, தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த காடுஉத்தனப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடேஷ், 54. இவர், பெங்களூரு எச்.எஸ்.ஆர்., லே அவுட் பகுதியில் வசித்து வருகிறார்; காடுஉத்தனப்பள்ளியில் உள்ள, மூன்று ஏக்கர் விவசாய நிலத்தை, பொக்லைன் உதவியுடன் சமன் செய்யும் பணியில் வெங்கடேஷ் நேற்று ஈடுபட்டிருந்தார். அப்போது, நிலத்தில் இருந்த கல்லை தூக்கிய போது, முக்கால் அடி உயரம் கொண்ட, செம்பால் செய்யப்பட்ட நின்ற வடிவிலான லட்சுமி சுவாமி சிலை கிடைத்தது. இதை பார்த்த வெங்கடேஷ், போடிச்சிப்பள்ளி வி.ஏ.ஓ., நல்லகவுண்டர், வருவாய் ஆய்வாளர் சகுந்தலா ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, சிலையை மீட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், தேன்கனிக்கோட்டை தாசில்தார் ராமச்சந்திரனிடம் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X