சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு செவிலியர் மீது தாக்குதல்: தந்தை, மகன் உட்பட நால்வர் கைது

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த இருதுக்கோட்டையை சேர்ந்தவர் நாகன், 49. எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். இவர் மனைவி வெள்ளையம்மாள், 38, உனிசெட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், செவிலியராக பணிபுரிகிறார்; நாகன் தனது வீட்டின் கட்டுமான பணிக்காக, மணல், கற்களை கொட்டி வைத்துள்ளார். இதனால் அவருக்கும், அவரது வீட்டின் அருகே வசித்து வரும் விவசாயி நாராயணப்பாவிற்கும், 50, இடையே கடந்த, 28ல் மாலை தகராறு ஏற்பட்டது. அப்போது, நாராயணப்பா, அவர் மகன் நவீன், 20, உறவினர்கள் லட்சுமி நாராயணன், 26, ஆஞ்சியப்பா, 25, ஆகிய நால்வரும் சேர்ந்து, நாகனிடம் தகராறு செய்து, வெள்ளையம்மாளை தாக்கினர். இது தொடர்பாக, தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து நாராயணப்பா, அவர் மகன் நவீன், லட்சுமி நாராயணன், ஆஞ்சியப்பா ஆகிய நான்கு பேரை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X