பொது செய்தி

தமிழ்நாடு

தொற்றிலிருந்து மீண்ட துப்புரவு ஆய்வாளர்: பூங்கொத்து கொடுத்து வரவேற்பு

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கொரோனா பாதிப்பிலிருந்து, மீண்ட துப்புரவு ஆய்வாளருக்கு, பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி நகராட்சியில், துப்புரவு ஆய்வாளராக பணிபுரிபவர் செந்தில்குமார், 45. இவர் கடந்த மே, 27ல் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டார். அங்கு பணியாற்றி வந்த இவருக்கு கடந்த மாதம், 15ல் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது சொந்த ஊரான சேலம் சென்று, அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில், அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், 14 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இவர், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்ததால், நேற்று கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகம் வந்தார். அவரை, நகராட்சி ஆணையாளர் சந்திரா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். கொரோனாவில் இருந்து குணமடைந்த செந்தில்குமார், நேற்று நகராட்சி பணியாளர்களுக்கு, கொரோனா தொற்றில் இருந்து எவ்வாறு பாதுகாத்து கொள்வது, நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு அதிகப்படுத்தி கொள்வது என்பது குறித்து விளக்கினார். செந்தில்குமார் கொரோனாவில் இருந்து குணமடைந்தாலும், மேலும், 14 நாட்களுக்கு வீட்டில் தனிமையில் இருக்கும்படி, நகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தி அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X