பொது செய்தி

தமிழ்நாடு

6 பேருக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 149ஆக உயர்வு

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: நேற்று ஆறு பேருக்கு கொரோனா உறுதியானதால், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 149 ஆக உயர்ந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகையை சேர்ந்த, 30 வயது ஆண், மும்பையில் இருந்து வந்தவர். ஓசூர் அரசனட்டி ஸ்ரீசாய் நகரை சேர்ந்த, 29 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா உறுதியானதால், ஓசூர் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கல்லாவியை சேர்ந்த, 21 வயது பெண்ணுக்கு கொரோனா உறுதியானதால், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை தவிர, ஓசூரில் உள்ள மைக்ரோ லேபில், 20க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்நிறுவனத்தை சேர்ந்த, 31, 24, 30 வயதுடைய மூன்று ஆண்களுக்கு கொரோனா உறுதியானதால், ஓசூர் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று, ஆறு பேருக்கு கொரோனா உறுதியானதால், மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 149ஆக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X