பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சென்டர்: ரோட்டரி கிளப் ஏற்பாடு

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

ஓசூர்: ஓசூர் அரசு மருத்துவமனையில், ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், ரோட்டரி அமைப்புகள் சார்பில், டயாலிசிஸ் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது.
ஓசூரில், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களில், 150க்கும் மேற்பட்டோர் டயாலிசிஸ் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆனால், ஓசூர் அரசு மருத்துவமனையில் ஒரு நாளைக்கு, குறைந்தபட்சம் ஆறு பேருக்கு மட்டுமே, டயாலிசிஸ் செய்ய முடியும். இதனால் தனியார் மருத்துவமனைக்கு சென்று, மக்கள் தங்கள் பணத்தை செலவு செய்து, டயாலிசிஸ் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஏழை மக்களின் நிலையை உணர்ந்து, ரோட்டரி கிளப் ஆப் ஓசூர், ரோட்டரி கிளப் ஆப் ஓசூர் மிட்டவுன், ரோட்டரி கிளப் ஆப் ஓசூர் சிப்காட் மற்றும் மக்கள் சங்கம் உதவியுடன், 75 லட்சம் ரூபாய் மதிப்பில், ஓசூர் அரசு மருத்துவமனையில், டயாலிசிஸ் சென்டர் துவக்கப்பட்டு, அதற்கு தேவையான ஐந்து டயாலிசிஸ் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், நோயாளிகளுக்கான படுக்கை வசதி, 'ஏசி' -ஆர்.ஓ., இயந்திரம் என, அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அரசு மருத்துவனைமக்கு வழங்கப்பட்டுள்ள ஐந்து டயாலிசிஸ் இயந்திரம் மூலம், கூடுதலாக ஒரு நாளைக்கு, 15 பேருக்கு இலவசமாக டயாலிசிஸ் செய்ய முடியும். முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, டயாலிசிஸ் சென்டரை துவக்கி வைத்தார். ரோட்டரி கிளப் மாவட்ட கவர்னர் நடேசன், முன்னாள் கவர்னர் தர்மேஸ் படேல், ரோட்டரி கிளப் ஆப் ஓசூர் சிப்காட் செயலாளர் சுப்பாராவ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X