வேலூர் மாவட்டத்தில் நேற்று 99 பேருக்கு கொரோனா தொற்று| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வேலூர் மாவட்டத்தில் நேற்று 99 பேருக்கு கொரோனா தொற்று

Added : ஜூலை 01, 2020
Share

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் நேற்று, 99 பேருக்கு கொரோனா உறுதியானது. சென்னையை தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் கொரோனா அதிகரித்து வருகிறது. நேற்று சத்துவாச்சாரி பகுதி ஒன்றில், 11 பேர், ரங்காபுரம் மூன்று, தர்ணம்பேட்டை எட்டு, தோட்டப்பாளையம் ஐந்து மற்றும் சைதாப்பேட்டை, சங்கரன்பாளையம், குடியாத்தம், கொணவட்டம், வேலப்பாடி, அணைக்கட்டு, சேண்பாக்கம், பென்னாத்தூர், கஸ்பா, காங்கேயநல்லூர், சலவன்பேட்டை, தொரப்பாடி என பல்வேறு இடங்களில், 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர்கள் வேலூர், குடியாத்தம் ஆகிய அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 1,477 ஆக உயர்ந்துள்ளது. வேலூர் அருகே, ஒடுக்கத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வரும், 35 வயது ஆண் ஊழியருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதியானது. இதனால் அங்கு பணிபுரியும் ஊழியர், டாக்டர், செவிலியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த, 10 நாட்களில் சிகிச்சை பெற்றவர்கள் பட்டியல் தயாரித்து, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X