பொது செய்தி

தமிழ்நாடு

ரயிலில் வந்த தமிழக தொழிலாளர்கள் சரியாக விசாரிக்காமல் விரட்டியடிப்பு

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில், சிறப்பு ரயிலில் வந்த தமிழக தொழிலாளர்களை, போலீசார் சரியாக விசாரிக்காமல் விரட்டியடித்தனர்.
அசாம் உள்பட வடகிழக்கு மாநிலத்தில் வேலை செய்து வந்த தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களை, சங்கமித்ரா சிறப்பு ரயிலில் ஏற்றி அனுப்பி வைத்தனர். அந்த ரயில் கடந்த மாதம், 28ல் இரவு, 11:00 மணிக்கு ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தது. அதிலிருந்து, 105 தொழிலாளர்கள் இறங்கினர். போலீசார் அவர்களை, வட மாநில தொழிலாளர்கள் என நினைத்து விரட்டி, அதே ரயிலில் ஏற்றி அனுப்பினர். அந்த ரயில், ஆந்திரா மாநிலம் குப்பத்தில் நின்றது. அங்கு தொழிலாளர்கள் இறங்கினர். அவர்களை குப்பம் போலீசார் தடுத்து, ஒரு லாரியில் ஏற்றி திருப்பத்தூர் மாவட்ட எல்லையான பச்சூர் அழைத்து சென்று இறக்கி விட்டனர். தகவலறிந்த சுகாதாரத்துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் மதுரை, தேனி, திருநெல்வேலி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்றும், கொரோனா ஊரடங்கால் வேலையிழந்து, சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு ரயிலில் ஏறியுள்ளனர். ஜோலார்பேட்டையில் இறங்கி, சொந்த ஊருக்கு செல்ல முயன்ற போது, போலீசார் சரியாக விசாரிக்காமல் தடியால் அடித்து விரட்டினர். குப்பத்தில் ரயில் நின்ற போது, தமிழர்கள் என தெரிந்ததும் அங்குள்ள போலீசார், ஒரே லாரியில் குப்பையை போல அடைத்து அனுப்பி வைத்ததும் தெரியவந்தது. திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன் அருள், அவர்களுக்கு உணவு அளித்து, நான்கு சிறப்பு பஸ்கள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X