இ-பாஸ் பெறாமல் தொழிலாளர்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் நுழைய தடை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இ-பாஸ் பெறாமல் தொழிலாளர்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் நுழைய தடை

Added : ஜூலை 01, 2020
Share

திருப்பத்தூர்: இ-பாஸ் பெறாமல், திருப்பத்தூர் மாவட்டத்தில் தொழிலாளர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் உள்ள தோல் தொழிற்சாலைகள், ஷூ தயாரிக்கும் நிறுவனங்களில், வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு, குடியாத்தம் ஆகிய பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். கொரோனா ஊரடங்கால், வேலூர் மாவட்டத்திலிருந்து திருப்பத்தூர் மாவட்டத்திற்கு செல்பவர்கள், இ-பாஸ் வாங்கியிருக்க வேண்டும். ஆனால் ஏராளமானவர்கள், இ-பாஸ் பெறாமல் ஆம்பூருக்கு வந்து வேலை செய்து வந்தனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது. எனவே, இ-பாஸ் பெறாமல் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு, தொழிலாளர்கள் நுழைய தடை விதித்து எஸ்.பி.,விஜயகுமார் உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று, 50க்கும் மேற்பட்ட வேன், பைக்குகளில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பேர்ணாம்பட்டு, குடியாத்தம் ஆகிய பகுதிகளில் இருந்து ஆம்பூர் வந்து கொண்டிருந்தனர். அவர்களை திருப்பத்தூர் மாவட்டம், ஓணாங்குட்டை சோதனைச்சாவடியில் போலீசார் திருப்பி அனுப்பினர். இ-பாஸ் பெறாமல் வந்தால், வாகனம் பறிமுதல் செய்யப்படும் என, போலீசார் எச்சரித்தனர். இதனால், ஆம்பூரில் உள்ள தொழிற்சாலை நிர்வாகங்கள் இ-பாஸ் பெற்றுத்தர ஏற்பாடு செய்ய வேண்டும் என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X