பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தொற்றால் வியாபாரி பலி: சிகிச்சையளித்த போலி டாக்டர் மீது வழக்கு

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

கரூர்: கரூர் அருகே மளிகை கடை வியாபாரி, கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருக்கு சிகிச்சையளித்ததாக, போலி டாக்டர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


கரூர், புன்னம் சத்திரத்தை சேர்ந்த, 48, வயதுடைய ஆண், அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். கடந்த, 28ல் காய்ச்சல் காரணமாக, கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டார். பரிசோதனையில், கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. தீவிர சிகிச்சையளித்தும், நேற்று முன் தினம் உயிரிழந்தார். சுகாதார துறை அதிகாரிகள் விசாரணையில், நொய்யலில் உள்ள, ராஜேஷ் மருத்துவமனையில், வியாபாரி கடந்த, 25, 26ல் சிகிச்சை பெற்றது தெரிந்தது. இதையடுத்து, அங்கு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, மருத்துவமனையை நடத்தி வந்த சண்முகம், 65, பல ஆண்டுகளுக்கு முன் தனியார் மருத்துவமனையில் கம்பவுண்டராக வேலை செய்ததும், அதன் அடிப்படையில் கடந்த, 20 ஆண்டுகளுக்கு மேலாக, மக்களுக்கு சிகிச்சை அளித்ததும், பிளஸ் 2 வரை மட்டுமே படித்துள்ளதும் தெரிந்தது. இதுகுறித்து, மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் பாக்கியலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில், சண்முகம் மீது, ஐந்து பிரிவுகளின் கீழ் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், சண்முகம் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவரும், 11 வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதன்பிறகு, சண்முகத்துக்கு கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதனை நடத்தப்பட்டு, கைது நடவடிக்கை இருக்கும் என, போலீசார் தெரிவித்தனர்.


* சண்முகத்தின் மூத்தமகள் சித்த மருத்துவராகவும், இளைய மகள் எம்.பி.பி.எஸ்., டாக்டராகவும் உள்ளனர். இருவரும், தந்தை நடத்திய மருத்துவமனையில் மக்களுக்கு சிகிச்சை அளித்துள்ளதாக, சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X