தமிழ்நாடு

கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் பருத்தி ஆடை: நாட்டில் முதல் முறையாக கரூரில் தயாரித்து அசத்தல்

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

கரூர்: நம் நாட்டில் முதன் முறையாக, கொரோனா போன்ற வைரஸிலிருந்து பாதுகாக்கும் மறு பயன்பாட்டு பருத்தி ஆடைகளின் உற்பத்தி கரூரில் தொடங்கப்பட்டுள்ளது.


கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ பணியாளர்களுக்கு கவச உடைகள், அதிகளவில் தேவைப்படுகின்றன. வைரஸ் தடுப்புக்கு தேவையான துணி பொருட்கள் தயாரிப்பில், இந்திய ஜவுளி நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. அதில், பி.பி.இ., கவச உடைகளை தொடர்ந்து, 'ஆன்டி வைரஸ்' பருத்தி ஆடைகள் தயாரிப்பில், கரூர் மருத்துவ துணி பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

இதுகுறித்து, அந்நிறுவன உரிமையாளர் நல்லமுத்து கூறியதாவது: கடந்த, 15 ஆண்டுகளுக்கு மேலாக, மருத்துவமனைக்கு தேவையான துணி பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான, பி.பி.இ., எனப்படும், பாதுகாப்பு கவச உடைகள் தயாரிக்கப்படுகின்றன. தற்போது, கொரோனா வைரஸிருந்து பாதுகாக்கும் வகையில் பருத்தி ஆடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. சுவிட்சர்லாந்திலிருந்து, பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமியை அழிக்கும் ரசாயனம் இறக்குமதி செய்யப்படுகிறது. பின், பருத்தி துணிகளில் நவீன தொழில் நுட்பத்தில், அந்த ரசாயனத்தை கலந்து சாயமேற்றப்படுகிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் துணியை கொண்டு, மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான உடைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த உடையை, 25 முறை துவைத்து உபயோகப்படுத்த முடியும். அதன்பின், சாதாரண ஆடையாக அணிந்து கொள்ளலாம். மற்ற உடைகளை போல் உடலுக்கு தீங்கு இல்லாமல், 99.99 சதவீத வைரசை அழித்து விடும் என சென்னை, மும்பையில் உள்ள இரண்டு ஆய்வகத்தில் சான்றிதழ் பெற்று இருக்கிறோம். சுற்றுச்சூழலுக்கு பாதகம் ஏற்படாமல் உடையை அப்புறப்படுத்துவது எளிதாகும். இப்போது மருத்துவ பணியாளர்களுக்கு உடை தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், விரைவில் போலீஸ் மற்றும் பொதுமக்களுக்கு அன்றாடம் பயன்படுத்தும் ஆடையை உற்பத்தி செய்ய இருக்கிறோம். நாட்டில் முதன் முறையாக கரூரில், ஆன்டி வைரஸ், ஆன்டி பாக்டீரியா உடை தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு பாதுகாப்பு உடையின் விலை, 1,500 ரூபாய். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X