பொது செய்தி

தமிழ்நாடு

லாரிகளுக்கான காலாண்டு வரி: ஜூலை 6 வரை கால அவகாசம்

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

நாமக்கல்: 'தமிழகத்தில், லாரிகளுக்கான காலாண்டு வரியை, வரும், 6 வரை அபராதமின்றி செலுத்தலாம்' என, அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் டோல் கமிட்டி துணைத்தலைவரும், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன முன்னாள் தலைவருமான நல்லதம்பி தெரிவித்துள்ளார்.


அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில், ஐந்து லட்சம் லாரிகள், டிரெய்லர்கள், டேங்கர்கள் உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்களுக்கு, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, தமிழக அரசுக்கு, காலாண்டு வரி செலுத்த வேண்டும். ஊரடங்கால், ஏப்ரல் முதல், ஜூன் முடிய உள்ள காலாண்டிற்கான வரியை ரத்து செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுத்தோம். பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட, ஏழு மாநிலங்களில், காலாண்டு வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை, தமிழக அரசு ஏற்காததால், லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், முருகன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில், பதில் மனு தாக்கல் செய்வதற்காக, வரும், 6ம் தேதி வரை அவகாசம் கேட்கப்பட்டது. அதற்கு அனுமதியளித்த நீதிமன்றம், வரும், 6 வரை, லாரி உரிமையாளர்கள் அபராதமின்றி காலாண்டு வரியை செலுத்தலாம் என, அறிவித்துள்ளது. எனவே, லாரி உரிமையாளர்கள், வரும், 6 வரை, அபராதம் இல்லாமல், காலாண்டு வரியை செலுத்தலாம். அதன்பின், வழக்கின் தீர்ப்பு அடிப்படையில், அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X