தமிழ்நாடு

துக்க நிகழ்வுக்கு சென்று வந்த 57 பேருக்கு தொற்று: கொளத்தூரில் சமூக பரவலாக மாறிய கொரோனா

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

மேட்டூர்: கொளத்தூரில், துக்க நிகழ்வுக்கு சென்ற, 57 பேருக்கு கொரோனா பரவியது. இதனால், சமூக தொற்றாக மாறியுள்ளது.


சேலம் மாவட்டம், கொளத்தூர், பண்ணவாடி ஊராட்சியைச் சேர்ந்தவர் செல்வம், 52. மதுரை விமான நிலையத்தில் பணிபுரிந்த அவர், உடல் நலக்குறைவால் ஒரு வாரத்துக்கு முன் இறந்தார். அவரது உடல், பண்ணவாடியிலுள்ள பெற்றோர் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த, கொளத்தூர் பேரூராட்சி, பண்ணவாடி ஊராட்சி, மேட்டூர் நகராட்சியைச் சேர்ந்த, அவரது உறவினர்கள் குவிந்தனர். அதில் பங்கேற்ற, மேட்டூர், பொன்னகரை சேர்ந்த, 70 வயது மருத்துவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால், துக்க நிகழ்வுக்கு சென்ற அவர்களது உறவினர், 65 பேருக்கு, நேற்று முன்தினம், பரிசோதனை செய்யப்பட்டது. அதில், செல்வத்தின் பெற்றோர், மனைவி, மகள், அவரது உறவினர்கள் என, பண்ணவாடி ஊராட்சியில், 17 பேர், கொளத்தூர் பேரூராட்சியில், 40 பேருக்கு, தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, பாதிப்பு அதிகம் உள்ளவர்களை, அரசு மருத்துவமனைக்கும், பாதிப்பு குறைவாகவும், உடல் ஆரோக்கியமாகவும் இருப்பவர்களை, மேச்சேரி தனியார் கல்லூரியிலுள்ள சிறப்பு வார்டுக்கும் அனுப்பும் பணியில், சுகாதாரத்துறையினர் ஈடுபட்டனர்.

கடைகள் மூடல்: கொளத்தூர் பேரூராட்சியில், கொரோனா சமூக தொற்றாக பரவியதால், நேற்று காலை, மருந்தகம், டாஸ்மாக் கடைகளை தவிர்த்து, காய்கறி, மளிகை உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டன. தொற்று பரவியவர் வசித்த, கொளத்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, வால்குறிச்சி பகுதியை, தனிமைப்படுத்தும் நடவடிக்கையில், பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

பண்ணவாடி 'தனிமை': பண்ணவாடி ஊராட்சியில் வசிக்கும், இறந்தவரின் குடும்பத்தினர், 17 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், அந்த கிராமம் முழுவதும், நேற்று தனிமைப்படுத்தப்பட்டது. அந்த ஊராட்சிக்கு செல்லும் வரபள்ளத்தூர், பூதப்பாடி, சந்திரிகாபுரம் எல்லை சாலைகளும் அடைக்கப்பட்டன. தொற்று மேலும் பரவியிருக்கும் என்பதால், ஊராட்சியில், அனைவருக்கும் இன்று பரிசோதனை செய்ய, சுகாதாரத் துறையினர் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகம் சார்பில், அனைத்து கிராமங்களுக்கும், வாகனங்களில் சென்று, ஒலிபெருக்கி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த ஊராட்சியில், 1,267 ஆண், 2,284 பெண் என, 3,551 பேர் வசிக்கின்றனர். மேட்டூர் அணை கரையோரமுள்ள இந்த கிராமத்தில், பலர், விவசாயம், மீன்பிடி தொழில் செய்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X