தமிழ்நாடு

ஓடாத பஸ்களுக்கு வரி கட்ட அதிகாரிகள் நிர்ப்பந்தம்: தமிழக தனியார் பஸ் உரிமையாளர்கள் அதிர்ச்சி

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

சேலம்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, பஸ்களின் இயக்கம் தடை செய்யப்பட்ட நிலையில், ஓடாமல் ஓரங்கட்டப்பட்ட பஸ்களுக்கு, அரசு காலாண்டு வரியை கட்ட நிர்ப்பந்தம் செய்து வருவது, தனியார் பஸ் உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தமிழகத்தில் கொரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில், கடந்த, மார்ச், 24ல், முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால், அனைத்து அரசு, தனியார் பஸ்களின் இயக்கம் தடைபட்டது. ஊரடங்கு படிப்படியாக விலக்கு அளிக்கப்பட்ட நிலையில், கடந்த, ஜூன், 1 முதல் அரசு பஸ்கள் இயங்கிய நிலையில், ஜூன், 8 முதல் தனியார் பஸ்கள் இயங்க துவங்கின. அதே நேரத்தில் கொரோனா பீதியால் பஸ்களில் போதிய கூட்டம் இல்லாததால், ஜூன், 13ல் தனியார் பஸ் உரிமையாளர்கள் இழப்பு அதிகரிப்பதாக கூறி பஸ்கள் இயக்கத்தை நிறுத்தி விட்டனர். 'பஸ்கள் ஓடாததால், வருவாய் இழப்பை சந்தித்துள்ளதால், அரசுக்கான காலாண்டு வரியை ரத்து செய்ய வேண்டும்' என, தனியார் பஸ் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். காலாண்டு வரி செலுத்த, நேற்று கடைசி நாள் என்பதால், அரசு வரி ரத்து குறித்து அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு, 'தனியார் பஸ்கள் காலாண்டு வரியை உடனடியாக செலுத்தும் படியும், செலுத்த தவறினால், பெர்மிட் ரத்து செய்யப்படும்' என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதை அடுத்து, நேற்று காலை முதல் தனியார் பஸ் உரிமையாளர்கள் மப்சல் பஸ்சுக்கு, 28 ஆயிரத்து, 500 ரூபாயும், நகர பஸ்களுக்கு, 32 ஆயிரம் ரூபாயை ஆன்லைன் மூலம் செலுத்தினர்.

இது குறித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் கூறியதாவது: பஸ்களுக்கான காலாண்டு வரியை அரசு கட்ட நிர்ப்பந்தம் செய்தது பெரும் அதிர்ச்சியையே கொடுத்துள்ளது. கொரோனா முற்றிலும் ஒழிந்து, நிலைமை சரியாகும் வரை, அடுத்த மூன்று மாதத்துக்கான காலாண்டு வரியை அரசு ரத்து செய்ய வேண்டும். எரிபொருள் மீதான வரி, சுங்க கட்டணம் ஆகியவற்றை குறைத்தால் மட்டுமே தொழிலை தொடர முடியும். அரசு எங்களின் கோரிக்கையை நிறைவேற்ற முன் வரவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X