வரும் 10ல் பட்டினி போராட்டம்: தனியார் பள்ளிகள் சங்கம் அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வரும் 10ல் பட்டினி போராட்டம்: தனியார் பள்ளிகள் சங்கம் அறிவிப்பு

Added : ஜூலை 01, 2020
Share
சேலம்: 'ஆசிரியர்கள், ஊழியர்கள், நிர்வாகிகள் சார்பில், வரும், 10ல், பட்டினி போராட்டம் நடத்தப்படும்' என, தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க மாநில பொதுச்செயலர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை: தனியார் பள்ளிகளை திறக்காமல், மாணவர் சேர்க்கை நடத்தாமல், புது, பழைய கட்டணத்தை

சேலம்: 'ஆசிரியர்கள், ஊழியர்கள், நிர்வாகிகள் சார்பில், வரும், 10ல், பட்டினி போராட்டம் நடத்தப்படும்' என, தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க மாநில பொதுச்செயலர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை: தனியார் பள்ளிகளை திறக்காமல், மாணவர் சேர்க்கை நடத்தாமல், புது, பழைய கட்டணத்தை வசூலிக்காமல், ஆசிரியர்களுக்கு சம்பளம் தர முடியவில்லை. பள்ளி நிர்வாகிகள் வாங்கிய கடனுக்கு, வட்டி கட்ட முடியாமல் தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர். தனியார் பள்ளிகள், 2018 - 19ம் ஆண்டு இலவச கட்டாய கல்வி சட்டத்தில் சேர்த்த, 25 சதவீத மாணவருக்கு கல்வி கட்டணம், 40 சதவீதம் நிலுவை யில் உள்ளது, 2019 - 20ம் ஆண்டு கல்வி கட்டண பாக்கி, முழுமையாக நிலுவையில் உள்ளது. இதை, அரசு உடனடியாக வழங்கினால் கூட, தனியார் பள்ளிகள் சமாளிக்க முடியும். இத்துடன் பள்ளி வாகனங்களுக்கு வரி ரத்து, தொடர் அங்கீகாரத்தை நிபந்தனை இல்லாமல் புதுப்பித்தல், ஓராண்டுக்கு இ.பி.எப்., - இ.எஸ்.ஐ., சொத்துவரியிலிருந்து விலக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை, மத்திய, மாநில அரசுகளிடம் பலமுறை வலியுறுத்தியுள்ளோம். தமிழகத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர், ஆசிரியரல்லா ஊழியர், டிரைவர் என, 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளோம். இதை உணர்த்த, வரும், 10 காலை, 10:00 முதல், மாலை, 5:00 மணி வரை, அவரவர் வீடுகளுக்கு முன், சமூக இடைவெளியில் பட்டினி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X